நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான சீம்ஸ் நாய் உயிரிழந்தது
By: Nagaraj Sun, 20 Aug 2023 1:46:36 PM
ஹாங்காங்: சீம்ஸ் நாய் உயிரிழந்தது... மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர், ”ஷிபா இனு” இன நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அவரால் பால்ட்ஸி என பெயரிடப்பட்ட அந்த நாய், சமூக வலைத்தளங்களில் நாய்களை வைத்து பகிரப்படும் மீம்ஸ்கள் மூலம் உலகளவில் மிகவும் பிரபலமானது.
சீஸ் பர்கர்களை விரும்பி சாப்பிட்டதால் நெட்டிசன்களால் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்நாய் நுரையீரலில் நீர் கோர்த்ததாலும், புற்றுநோயாலும் கடந்த ஓராண்டாக சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நுரையீரலில் கோர்த்த நீரை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது சீம் இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.