Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண்ணுக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு; இது பெங்களூரில்

பெண்ணுக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு; இது பெங்களூரில்

By: Nagaraj Sun, 06 Sept 2020 6:59:01 PM

பெண்ணுக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு; இது பெங்களூரில்

பெண்ணுக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு... பெங்களூருவில் பெண் ஒருவர் 2-வது முறை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு 2-வது முறையாக பாதிப்புக்குள்ளாகும் முதல் நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது:

bangalore,corona,symptoms,2nd time,infection ,பெங்களூரு, கொரோனா, அறிகுறிகள், 2வது முறை, தொற்று

"பெங்களூருவில் முதன்முறையாக 27 வயது பெண் ஒருவர் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் வீடு திரும்பினார்.

எனினும், ஒரு மாதத்துக்குப் பிறகு அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது."

Tags :
|