Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடைக்காலத்தில் இரண்டாவது சுற்று கொரோனா; தொற்றியல் துறை பேராசிரியர் எச்சரிக்கை

கோடைக்காலத்தில் இரண்டாவது சுற்று கொரோனா; தொற்றியல் துறை பேராசிரியர் எச்சரிக்கை

By: Nagaraj Wed, 08 July 2020 2:00:37 PM

கோடைக்காலத்தில் இரண்டாவது சுற்று கொரோனா; தொற்றியல் துறை பேராசிரியர் எச்சரிக்கை

கொரோனா இரண்டாவது பரவல்... பிரான்சில் கோடை காலத்தில் கொரோனாவிற்கான இரண்டாவது மிகப் பெரிய தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக தொற்றியல் துறையின் தலைமை வைத்தியரும் ஆராய்ச்சியாளருமான எரிக் காம்ஸ் எச்சரித்துள்ளார்,

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் உள்ளிருப்பு விதி அமுலில் இருந்தது. அதன் பின் நாட்டில் உள்ளிருப்பு தளர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி நாட்டில் கோடை கால விடுமுறையும் ஆரம்பமாகிவிட்டது, விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றலாத்துறையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மிகவும் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றது.

france,risk,corona,second round,prof ,பிரான்ஸ், அபாயம், கொரோனா, இரண்டாவது சுற்று, பேராசிரியர்

கொரோனா வைரஸ் என்பது ஒரு பயணிக்கும் வைரஸ். இதன் மூலம் மீண்டும் கோடை காலத்தில் பிரான்சில் இரண்டாவது பாரிய கொரோனா வைரஸ் தொற்றலை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த, தொற்றியல் துறையின் தலைமை வைத்தியரும் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் எரிக் காம்ஸ் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே மொரோக்கோ, போத்துக்கல்லின் லிஸ்பொன் நகரம், பிரித்தானியாவின் லெய்செஸ்டர் மற்றும் ஜேர்மனியின் பல நகரங்கள் இரண்டாவது தொற்றலைக்கு மீண்டும் உள்ளாகியுள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் விட மிகமோசமான தொற்று பிரான்சில் ஏற்படும் அபாயம் உள்ளது. பிரான்ஸ் தனது சுகாதாரக் கலாச்சாரத்தைத் தொலைத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகின்றது எனவும் பேராசிரியர் எரிக் காம்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|