Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

By: Nagaraj Sun, 26 June 2022 02:27:48 AM

அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடில்லி: பாதுகாப்பு ஏற்பாடுகள்... அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் கோயிலுக்கு ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். எனினும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அந்த ஆண்டு யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக 2020-ஆம் ஆண்டிலும், கரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டிலும் யாத்திரை நடைபெறவில்லை.

security,mission,4 times,increase,number,amarnath pilgrimage ,பாதுகாப்பு, பணி, 4 மடங்கு, அதிகரிப்பு, எண்ணிக்கை, அமர்நாத் யாத்திரை

இந்நிலையில், நிகழாண்டு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை யாத்திரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அமா்நாத் யாத்திரை நடைபெறவுள்ளதால், அதிக அளவிலான யாத்ரீகா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேவேளையில், யாத்திரையின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் பணியில் முந்தைய ஆண்டுகளைவிட மூன்று முதல் நான்கு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

Tags :
|