Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நார்கோ சப்மரைனில் கடத்தப்பட்ட 3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்

நார்கோ சப்மரைனில் கடத்தப்பட்ட 3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்

By: Nagaraj Mon, 15 May 2023 5:43:00 PM

நார்கோ சப்மரைனில் கடத்தப்பட்ட 3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்

கொலம்பியா: 3 ஆயிரம் கிலோ கொக்கைன் பறிமுதல்... வெளியே தெரியாத வண்ணம், நீரில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைனில் கடத்தப்பட்ட 3,000 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கொலம்பியா கடற்படையினர் கைப்பற்றினர்.

ரேடார், சோனார் போன்ற கருவிகளில் சிக்காமலிருக்க நீரின் மேல்மட்டத்தில் மூழ்கியபடி பயணிக்கும் நார்கோ-சப்மரைன் கப்பலை கடத்தல் கும்பல் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

cockaigan,confiscation,pacific ocean,trial,navy ,கொக்கைகன், பறிமுதல், பசிபிக் பெருங்கடல், சோதனை, கடற்படை

இவ்வகை கப்பல்களை கட்டமைப்பவர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் கொலம்பியாவில் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பசிபிக் பெருங்கடல் வழியாக சென்ற 100 அடி நீள நார்கோ-சப்மரைனை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டபோது 3,000 கிலோ கொக்கைன் சிக்கியது. கப்பலில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags :
|