Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அமெரிக்காவிற்கு சென்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்த போதை பொருள் பறிமுதல்

மத்திய அமெரிக்காவிற்கு சென்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்த போதை பொருள் பறிமுதல்

By: Nagaraj Sat, 13 May 2023 4:37:22 PM

மத்திய அமெரிக்காவிற்கு சென்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்த போதை பொருள் பறிமுதல்

கொலம்பியா: போதைப் பொருள் கைப்பற்றினர்... தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடற்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடல் வழியாக கடத்த முயன்ற 3 ஆயிரம் கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கொலம்பிய பசிபிக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடற்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

drugs,submarines,seizures,authorities,action ,போதைப்பொருள், நீர்மூழ்கிகப்பல், பறிமுதல், அதிகாரிகள், நடவடிக்கை

அப்போது, மத்திய அமெரிக்காவை நோக்கிச் சென்ற நீர்மூழ்கி கப்பலை இடைமறித்து சோதனையிட்ட அதிகாரிகள், 103 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

இப்படி பலவிதத்திலும் போதைப்பொருள் கடத்தப்படுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் பொதுமக்கள்.

Tags :
|