Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு முதன்முதலில் கணினி வழியே நடைபெற இருப்பதாக தேர்வாணையம் அறிவிப்பு

குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு முதன்முதலில் கணினி வழியே நடைபெற இருப்பதாக தேர்வாணையம் அறிவிப்பு

By: vaithegi Sat, 18 June 2022 5:04:32 PM

குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு முதன்முதலில்   கணினி வழியே நடைபெற இருப்பதாக தேர்வாணையம் அறிவிப்பு

தமிழகம் : தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாபரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த தேர்வானது நாளை (ஜூன் 19) தமிழகத்தில் பல மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. நாளை (ஜூன் 19) காலை 9 மணிக்கும், பிற்பகல் 1.30 மணிக்கும் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. இந்த நேரத்துக்கு பின் தேர்வர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

selection,competitive examinations,child protection officer position ,தேர்வாணையம் ,போட்டித் தேர்வுகள்,குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி

முதன்முறையாக இந்த தேர்வானது கணினி வழியே நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணினி வழித் தேர்வுக்கான முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு தொடங்கும் போது ஒரு நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினி திரையில் தோன்றும். தேர்வு தொடங்கிய பொது 180 நிமிடங்கள் இருப்பதாக காட்டப்படும் என தெரிவித்துள்ளது.

அது படிப்படியாக குறைந்து பூஜ்ஜியம் வந்து முடிந்துவிடும். அதன் பின் தேர்வு தானாக கணினி அமைப்பில் சேமிக்கப்படும். வினாக்கள் ஏறுமுக வரிசைப்படி ஒவ்வொன்றாக கணினி திரையில் தோன்றும் அதில் தேர்வர்கள் ஒவ்வொரு வினாவிற்கு விடை அளிக்கலாம். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்பது போல கொடுக்கப்பட்ட விடை தெரிவுகளில் ஒன்றின் மீது கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் அதை சேமிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் விடைகள் சேமிக்கப்படாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது..

Tags :