Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் தற்சார்பு என்பது வெறும் உபதேசம் தான் - சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

இந்தியாவில் தற்சார்பு என்பது வெறும் உபதேசம் தான் - சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

By: Karunakaran Mon, 17 Aug 2020 5:46:23 PM

இந்தியாவில் தற்சார்பு என்பது வெறும் உபதேசம் தான் - சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

தற்சார்பு நாடாக இந்தியாவை உருவாக்குவது குறித்து அடிக்கடி பிரதமர் மோடி பேசிவருகிறார். தற்போது, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ரஷியா தற்சார்பு நிலையை எட்டியுள்ளதை ஒப்பிட்டு மத்திய அரசை சிவசேனா தாக்கி உள்ளது. சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தற்சார்பு இந்தியாவுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததில் ரஷியா தற்சார்பு நிலையை எட்டி உள்ளது. ஆனால் இதில் நாம் வெறும் உபதேசம் தான் செய்து வருகிறோம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

self-sufficiency,india,doctrine,sanjay rawat ,தன்னிறைவு, இந்தியா, கோட்பாடு, சஞ்சய் ராவத்

ரஷியாவின் தடுப்பு மருந்துக்கு எதிராக உலகம் முழுவதும் பிரசாரங்கள் எழுந்த நிலையில், அந்த நாட்டு அதிபர் புதின் தடுப்பூசி மருந்தை தனது மகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தி, தனது நாட்டு மக்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். தற்சார்பு விவகாரத்தில் உலகிற்கு முதல் பாடத்தை ரஷியா தான் கற்று கொடுத்து உள்ளது. இது தான் வல்லரசுக்கான அறிகுறி என்று சஞ்சய் ராவத் ‘சாம்னா’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

மேலும் அவர், ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் அவருடன் கைகுலுக்கி கொண்டதால், பிரதமர் மோடி தன்னை தனிமைப்படுத்தி கொள்வாரா? முன்பெல்லாம் மோடி, அமித்ஷா மீது தான் பயம் இருந்தது. தற்போது அவர்களை விட கொரோனா தொற்றின் மீது தான் அதிக பயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Tags :
|