Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இல்லை; அதிகாரிகள் தகவலால் மக்கள் மகிழ்ச்சி

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இல்லை; அதிகாரிகள் தகவலால் மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Tue, 17 Nov 2020 8:04:14 PM

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இல்லை; அதிகாரிகள் தகவலால் மக்கள் மகிழ்ச்சி

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு இல்லை... சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. கனமழை தொடர்ந்து நீடித்தால் விரைவில் முழுவதும் நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் ன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 21 அடி உயரத்தை தண்ணீர் எட்டிள்ளது.

excess water,sembarambakkam,no opening,officials ,உபரி நீர், செம்பரம்பாக்கம், திறப்பு இல்லை, அதிகாரிகள்

இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. அதே வேளையில் சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 120 கண அடி அனுப்பபடுகிறது .

இந்த நிலையில், செப்பரம்பாக்கம் ஏரி நிரம்பி விட்டதாகவும், அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இதனால், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் போன்ற பகுதிகள் மற்றும் அடையாறு கரையோரப் பகுதிகளில், தண்ணீர் புக வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த 2115ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பேரழிவு போல மீண்டும் பேரழிவு ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது என்று ஆறுதல் தெரிவித்திருப்பதுடன், ஏரி நிரம்பிய பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் திறக்கப்படும் என்று கூறினர்.

கடநத 2015ல் நடந்தது போல வெள்ளம் இப்போது வர வாய்ப்பு இல்லை. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. 22 அடியை எட்டிய உடன் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :