Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் சட்டவிரோதமான செயல்

குஜராத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் சட்டவிரோதமான செயல்

By: vaithegi Thu, 07 Sept 2023 4:54:32 PM

குஜராத்தில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் சட்டவிரோதமான செயல்

குஜராத் : இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 6 ஆண்டுகள் மாநில அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதையடுத்து அந்த வழக்கு விசாரணையில் 2023 ஆண்டு ஜூன் 1ம் தேதி 6 வயது நிறைவடையாத குழந்தைகளை பள்ளியில் 2023-24ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பில் சேர்க்க கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது சரியானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

children,high court ,குழந்தைகள்,உயர்நீதிமன்றம்

மேலும் அது மட்டுமில்லாமல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலர் பள்ளிக்கு செல்ல வற்புறுவது, பெற்றோர்கள் சட்டத்திற்கு புறம்பாக செய்யும் செயலாகும் என்று தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி என்.வி.அன்ஜாரியா ஆகியோர் அடங்கிய குழுவில் தெரிவிக்கப்பட்டது.

பாலர் பள்ளியில் சேர்க்கை நடைமுறைகளைக் கையாளும் RTE விதிகள், 2012 இன் விதி 8ஐ மேற்கோள் காட்டி, ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி வரை எந்த பாலர் பள்ளியும் 3 வயதை பூர்த்தி செய்யாத குழந்தையை அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Tags :