Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தான் முதல்வருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீர் சந்திப்பு

ராஜஸ்தான் முதல்வருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீர் சந்திப்பு

By: Nagaraj Mon, 26 Sept 2022 6:38:47 PM

ராஜஸ்தான் முதல்வருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீர் சந்திப்பு

ராஜஸ்தான்: திடீர் சந்திப்பு... ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவதால் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்கிற கட்சியின் முடிவின்படி, அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.

meeting,senior leader,ashok khelat,mallikarjuna kharge,congress ,சந்திப்பு, மூத்த தலைவர், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட் முதல்வரானால் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளது கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பொதுச் செயலாளர் அஜய் மேகனும் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பிற்பகல் ஜெய்ப்பூரில் உள்ள மரியாட் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநில முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசியுள்ளார்

Tags :