Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இந்திய மூத்த விஞ்ஞானி கைது

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இந்திய மூத்த விஞ்ஞானி கைது

By: Nagaraj Sun, 07 May 2023 12:32:08 PM

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இந்திய மூத்த விஞ்ஞானி கைது

மும்பை: விஞ்ஞானி கைது... இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர், மும்பை சிறப்புப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO-வில் மூத்த விஞ்ஞானி மற்றும் இயக்குனராக பணியாற்றியவர் 60 வயதான பிரதீப் குருகர். ஏவுகணை வடிவமைப்பு மற்றும் நிலநிறுத்தப்பட்ட இடம் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் உளவு ஏஜென்டுடன் பகிர்ந்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் மும்பை பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் பிரதீப் குருகரை கைது செய்தனர். விஞ்ஞானி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி எதிரி நாட்டிற்கு வழங்கிய அதிகாரப்பூர்வ ரகசியங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தும், எதிரி நாட்டிற்கு ரகசியமாக முக்கியமான விவரங்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த விஞ்ஞானி, மெசேஜ் செயலி மூலமாக குரல் மற்றும் வீடியோ அழைப்பு வாயிலாக பாகிஸ்தான் உளவுத்துறை ஆபரேட்டிவ் முகவருடன் தொடர்பிலிருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக மும்பை பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவில் உயர் பதவியில் இருந்த பிரதீப், எப்படி பிடிக்கப்பட்டார் என்பது குறித்து பரபரப்பு தகவல்களும் வெளிவந்துள்ளன. அவருக்கு சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தான் உளவு ஏஜென்ட் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். முக்கிய தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டதன் மூலம் அவரது நம்பிக்கையை பெற்றார்.

scientist,arrested,charged,principal technology,pakistan ,விஞ்ஞானி, கைது, குற்றச்சாட்டு, முதன்மை தொழில்நுட்பம், பாகிஸ்தான்

அதனால் பிரதீப்பும் அவருடன் நெருங்கி பழகியதோடு அடிக்கடி தொடர்பிலும் இருந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக பிரதீப்பின் தனிப்பட்ட புகைப்படம் வீடியோ போன்றவற்றைக் காட்டி மிரட்டியதால், இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய தகவல்களை பகிரும் கட்டாயத்திற்கு அவர் ஆளானாரா என்றும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவரை வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சிப் பிறவில் 1988 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிலைகளில் பிரதீப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக முக்கிய திட்டங்கள் செயலாக்கம், ராணுவ தளவாடங்கள் மற்றும் ஏவுகணைகள் வடிவமைப்பு ஆகியவற்றை ராணுவத்திற்கு சப்ளை செய்தது மற்றும் அவை நிலை நிறுத்தப்பட்ட இடங்கள் போன்றவற்றை நன்கு அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அதை வைத்தே இவரை பாகிஸ்தான் உளவு ஏஜெண்டுகள் நெருங்கிப் பழகி வீழ்த்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த ஆண்டில் கைதான இரண்டாவது விஞ்ஞானி பிரதீப் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் 'பாபு ராம் தேர' என்ற முதன்மை தொழில்நுட்ப நிபுணர், இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :