Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்து மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசு உயிரிழந்தார்

கொரோனா பாதித்து மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசு உயிரிழந்தார்

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:32:18 PM

கொரோனா பாதித்து மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசு  உயிரிழந்தார்

மூத்த அணு விஞ்ஞானி பலி... மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் பாசு கொரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது: டாக்டர் சேகர் பாசுவுக்கு வயது 68. அவர் கடந்த சில நாள்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

corona vulnerability,dr. basu,nuclear program,pioneer ,கொரோனா பாதிப்பு, டாக்டர் பாசு, அணுசக்தி திட்டம், முன்னோடி

இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இயந்திர பொறியியலாளரான டாக்டர் பாசு அணுசக்தி திட்டத்தில் சிறந்த பங்களிப்புக்காக, 2014-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். மேலும், இந்தியாவின் முதல் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :