Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

By: Karunakaran Sun, 20 Sept 2020 7:32:04 PM

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனை நடைபெற்றது. சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

sensation,poisoned letter,us white house,trump ,பரபரப்பு, விஷக் கடிதம், அமெரிக்க வெள்ளை மாளிகை, டிரம்ப்

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகைக்கு இது போன்ற நஞ்சு பொருட்கள் அடங்கிய கடிதங்கள் இதற்கு முன்பே நடந்துள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு நஞ்சுப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பின், கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, அதிபர் டிரம்ப்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :