Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது குறித்து பரபரப்பு தீர்ப்பு

பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது குறித்து பரபரப்பு தீர்ப்பு

By: Nagaraj Fri, 14 Oct 2022 09:12:10 AM

பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது குறித்து பரபரப்பு தீர்ப்பு

ஐரோப்பா: தடை செய்யலாம்... ஐரோப்பாவில் பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம் என ஐரோப்பாவின் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் தலையில் முக்காடு அணிந்து வரக்கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

germany,women,veiling,prohibition,court,judgment ,ஜெர்மனி, பெண்கள், முக்காடு போடுவது, தடை, நீதிமன்றம், தீர்ப்பு

இந்த நிலையில் தான் ஐரோப்பிய உயர் நீதிமன்றம் இந்த பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. ஊழியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாத தடையாக இருக்கும் வரை ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் முக்காடு அணிவதை தடை செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் அனைவரையும் நடுநிலையாக ஆடை அணிய செய்ய, நிறுவனத்தின் உள்ளக விதிகளின் அடிப்படையில் இந்த தடை அமைந்திருக்க வேண்டும் என்று ஐரோப்பிய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


ஏற்கனவே ஜெர்மனியில், பணியிடத்தில் பெண்களுக்கு முக்காடு போடும் தடை சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் தற்போது ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|