Advertisement

செந்தில் பாலாஜி வழக்கு இன்று மீண்டும் விசாரணை

By: vaithegi Tue, 11 July 2023 10:54:33 AM

செந்தில் பாலாஜி வழக்கு இன்று மீண்டும் விசாரணை

சென்னை: இன்று இறுதி விசாரணை .... அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் , சென்னை காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்.

இதற்கு இடையே செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு மாறுபட்டு தீர்ப்பை வழங்கினர். எனவே இதன் காரணமாக தலைமை நீதிபதி 3-வதாக உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயனை வழக்கை விசாரிக்க நியமித்தார்.

inquiry,senthil balaji ,விசாரணை,செந்தில் பாலாஜி

கடந்த 6ம் தேதி இவ்வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார். இதனையடுத்து கடந்த 7-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா? ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்று குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் எனவும், அமலாக்கத் துறையினர் கைது செய்யலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. அமலாகத் துறையினர் கைது செய்யலாம், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 11ம் தேதிக்கு அதாவது இன்று ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதத்தை முன்வைக்க உள்ளார். மேலும் நாளை அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

Tags :