Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 234 தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது .. செந்தில் பாலாஜி

234 தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது .. செந்தில் பாலாஜி

By: vaithegi Sat, 06 Aug 2022 11:21:56 AM

234 தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது .. செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மின்சார வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் பல பகுதிகளில் கனமழை காரணமாக மரங்கள் மின்மாற்றிகள் மீது சாய்ந்து விழுந்துள்ளன.

அதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதை சீர் செய்யும் பொருட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மழையின் போது சீரான மின் விநியோகம் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கூறியிருப்பதாவது, காவிரி கரையோர பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு மின் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பகுதிகளில் நீர் வடிந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும் காவிரி கரையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

power supply,senthil balaji ,மின் விநியோகம்,செந்தில் பாலாஜி

மேலும் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 234 தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக பணி செய்வார்கள் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின் விபத்துக்கள் மட்டும் மின் கசிவுகள்ஏற்படாத வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவார்கள்.

இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ச்சர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :