Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது .. செந்தில் பாலாஜி பேட்டி

தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது .. செந்தில் பாலாஜி பேட்டி

By: vaithegi Wed, 17 May 2023 4:07:52 PM

தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது  ..   செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: மின்சாரத்துறை ஆமிச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதையடுத்து அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு முழுவதும் மின் தேவை கடந்த 2 ஆண்டுகளில் மிக அதிகமாகி உள்ளது; 2020 – 21 இல் மின் நுகர்வு 16,481 மெகாவாட்; ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

senthil balaji,power outage ,செந்தில் பாலாஜி ,மின் தடை

இதையடுத்து தமிழகத்தில் இரவு நேரங்களில் 8 முதல் 12 மணி வரை மின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் மின் தடை தான் ஏற்படுகிறது, மின்வெட்டு கிடையாது .தமிழகத்தில் கோடைகாலத்தில் 19,387 மெகாவாட் மின் தேவை உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், சென்னையின் மின்தேவை அதிகமாக உயர்ந்துள்ளது, தற்போது 4,016 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது; எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது;

மின்தடை என்பது பராமரிப்புப் பணிகளுக்காக செய்யப்படுவது. தேவைக்கு அதிகமாக மின் விநியோகம் செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :