Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழையால் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின் விநியோகம் தடை ஏற்படவில்லை ... செந்தில் பாலாஜி

மழையால் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின் விநியோகம் தடை ஏற்படவில்லை ... செந்தில் பாலாஜி

By: vaithegi Thu, 04 Aug 2022 12:15:41 PM

மழையால் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்  விநியோகம் தடை ஏற்படவில்லை ...  செந்தில் பாலாஜி

சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக கனமழையும், ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது. எப்போதும் பருவமழை காலங்களில் அதிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் மற்றும் பல பகுதிகளில் மின் கம்பங்களில் மின்கசிவும் ஏற்பட்டு மின் விநியோகம் தடை ஏற்படும்.

ஆனால், தற்போது கனமழையின் போதும் மின் கம்பங்களில் எவ்வித கோளாறுகளும் ஏற்படாத வண்ணம் தக்க நடவடிக்கை பல எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மழைக்காலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி கூறியுள்ளார்.

senthil balaji,power supply ,செந்தில் பாலாஜி,மின்  விநியோகம்

கனமழையின் போதும் எந்த மாவட்டங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட கூடாது என்பதற்காக ஊழியர்கள் மிக தீவிர பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக எந்த பகுதியிலும் மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளார்.

மேலும், மழையால் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின் விநியோகம் தடை ஏற்படவில்லை மற்றும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தடையற்ற மின் வினியோகம் இருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் எந்த மின்கம்பங்களிலும் பழுதுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அப்படி பழுதுகள் ஏற்பட்டாலும் கூட பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை பல எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :