Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறை வளாக கைதிகளுக்கான மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம்

காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறை வளாக கைதிகளுக்கான மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம்

By: Nagaraj Tue, 18 July 2023 10:53:50 AM

காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறை வளாக கைதிகளுக்கான மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றம்

சென்னை: செந்தில்பாலாஜி புழல் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

10 நாட்கள் மட்டுமே அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருக்க முடியும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில் , அறுவை சிகிச்ச்சை முடிந்து 27 நாட்கள் கழித்து காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி புழல் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடந்த மாதம் 21 ந்தேதி இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பதாக கூறி காவேரி மருத்துவமனையில் பைப்பாஸ் அறுவைசிகிச்சை நடந்தது. அதன் பின்னர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார் செந்தில்பாலாஜி.

remand,enforcement,treatment,hospital,puzhal jail ,விசாரணை கைதி, அமலாக்கத்துறை, சிகிச்சை, மருத்துவமனை, புழல் சிறை

இந்த நிலையில் 27 நாட்களுக்கு பின்னர் திங்கட்கிழமை மாலை காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜி ஆம்புலன்ஸ் மூலமாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

செந்தில்பாலாஜிக்கு மேலும் சில தினங்கள் மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால், புழல் சிறை வளாகத்தில் உள்ள கைதிகளுக்காண சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை முடிந்ததும் விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி வருகின்ற ஜூலை 26ந்தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரணை கைதியாக உள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
|