Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது .. காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது .. காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

By: vaithegi Wed, 21 June 2023 11:44:04 AM

செந்தில் பாலாஜி உடல்நிலை தற்போது சீராக உள்ளது .. காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை முதல் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது. இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பிறகாக செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

hospital management,senthil balaji ,மருத்துவமனை நிர்வாகம்,செந்தில் பாலாஜி

இதையடுத்து இது பற்றி காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் இதய துடிப்பு, இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 4 பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டது.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :