Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 ஆவது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 ஆவது முறையாக நீட்டிப்பு

By: vaithegi Thu, 23 Nov 2023 10:22:37 AM

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 ஆவது முறையாக நீட்டிப்பு


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கபட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி, அங்காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜார்படுத்தபட்டார்.

இதனையடுத்து செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இன்று நீதிமன்ற காவல் நீட்டிப்பதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11 ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

court constable,senthil balaji ,நீதிமன்ற காவல் ,செந்தில் பாலாஜி


இதற்கு இடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கதுறை எடுத்துச் சென்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை அமலாக்கதுறை வசம் உள்ளதாகவும் அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்க கோரி செந்தில் பாலாஜி கடந்த விசாரணையின் போது தாக்கல் செய்யபட்டது. அம்மனுவிற்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து அதில் இந்த வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு குற்றம்சாட்டபட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டு உள்ளது என தெரிவிக்கபட்டது.இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 4 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

Tags :