Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை

சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை

By: vaithegi Wed, 10 Aug 2022 07:46:02 AM

சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை

சியோல்: தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. அதன் படி ஒரு மணி நேரத்தில மட்டும் 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை எநாவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

unprecedented rain,seoul ,வரலாறு காணாத மழை,சியோல்

இதனை தொடர்ந்து சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் போன்றவை பாதுகாப்புக்காக மூடப்பட்டன. இதையடுத்து எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.

மேலும் மாநகரப் பகுதியில் மட்டும் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் பற்றி மிக தீவிரமாக கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :