Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி .. 5 அம்மா உணவகங்களில் தயாரிக்க ... தனித்தனியாக சமையல் கூடம்

மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி .. 5 அம்மா உணவகங்களில் தயாரிக்க ... தனித்தனியாக சமையல் கூடம்

By: vaithegi Mon, 22 Aug 2022 5:45:42 PM

மாணவர்களுக்கான  காலை சிற்றுண்டி ..  5 அம்மா உணவகங்களில் தயாரிக்க ... தனித்தனியாக சமையல் கூடம்

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.இதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு நடக்கிறது. தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் முதலில் காலை உணவு திட்டம் வட சென்னை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலங்கள் 1, 3, 4, 5 போன்றவற்றிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2 சமையல் கூடம் எங்கு அமைப்பது என்பது பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறுதியாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

Tags :