Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண்களுக்கு என தனி தேர்தல் அறிக்கை... காங்கிரஸ் மாநில தலைவர் தகவல்

பெண்களுக்கு என தனி தேர்தல் அறிக்கை... காங்கிரஸ் மாநில தலைவர் தகவல்

By: Nagaraj Thu, 12 Jan 2023 12:04:32 PM

பெண்களுக்கு என தனி தேர்தல் அறிக்கை... காங்கிரஸ் மாநில தலைவர் தகவல்

கர்நாடகா: கர்நாடகத்தில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம்பேர் பெண்களாக உள்ளனர். அதனால் பெண்களுக்கு என தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பா.ஜ.க. தனித்து போட்டியிடும் நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகின்றன. பா.ஜ.க.விடமிருந்து எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் முழுமுனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு முகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, இந்த மாதம் 16 ஆம் தேதி கர்நாடக மாநிலம் வருகிறார். மகளிர் பேரணியில் பங்கேற்று, மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்.

priyanka,women,importance,sivakumar,opinions ,பிரியங்கா, பெண்கள், முக்கியத்துவம், சிவக்குமார், கருத்துக்கள்

இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடகத்தில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம்பேர் பெண்களாக உள்ளனர். அதனால் பெண்களுக்கு என தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக பெண்கள் மற்றும் பெண்கள் சார்ந்த அமைப்புகளிடம் யோசனை கேட்டுள்ளோம். அவர்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

வருகிற 16 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்டில் நடைபெற உள்ளது. அதில் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார். பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அவர் வெளியிடுவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆட்சியில் காங்கிரஸ் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியது. அதுபோல் வரும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படும் வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

மகளிர் மேம்பாடு அடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறியுள்ள சிவகுமார், பெண்கள் தங்களது கருத்துக்களை [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் அல்லது 799655199 என்ற வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம். மேலும் பிரியங்காவை வரவேற்கும் வகையில் வாழ்த்துசெய்திகளையும் விடியோக்களையும் 8867978377 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 15 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|