Advertisement

செப்டம்பர் மாத வங்கிகளுக்கான விடுமுறை

By: vaithegi Fri, 26 Aug 2022 12:00:57 PM

செப்டம்பர் மாத வங்கிகளுக்கான விடுமுறை

இந்தியா: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. எப்போதும் வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை, 4-வது சனிக்கிழமை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த வார இறுதி விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்த பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. அதாவது, எந்தெந்த மாநிலத்தில் அந்த பண்டிகை கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே இதனால், வங்கிகளுக்கு செல்ல திட்டமிடும் போது தம்முடைய மாநிலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து வங்கிகளுக்கு செல்லும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

holiday,bank ,விடுமுறை ,வங்கி

அதன்படி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்கள் :

செப்டம்பர் 1: விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பனாஜியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 4: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 6: கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 7: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 9: இந்திரஜாத்ரா காரணமாக காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 10: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 11: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 18: ஞாயிறு விடுமுறை

செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 24: நான்காவது சனிக்கிழமை விடுமுறை
செப்டம்பர் 25: ஞாயிறு விடுமுறை
செப்டம்பர் 26: லைனிங்தௌ சனாமாஹியின் நவராத்திரி ஸ்தாப்னாகாரணமாக இம்பால் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Tags :