Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

By: Monisha Wed, 23 Dec 2020 12:26:23 PM

புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை

புதிய வகை வைரஸ் இங்கிலாந்து நாட்டில் பரவி இருப்பதால் லண்டனுக்கான சிறப்பு விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 25 வயது மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.

மேலும், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். விமானம் மூலம் அண்டை மாநிலங்களுக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழக எல்லைகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 25-ம் தேதிக்கு பிறகு லண்டனில் இருந்து தமிழகம் வந்த பயணிகள் அனைவரையும் சுகாதாரத்துறை பட்டியலிட்டு கண்காணித்து வருகிறது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு கொரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

corona virus,severity,london,travelers,tracking ,கொரோனா வைரஸ்,தீவிரம்,லண்டன்,பயணிகள்,கண்காணிப்பு

தற்போது எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:- லண்டனில் இருந்து வந்த எட்டு பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஏழு பேருக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து விமான நிலையங்கள், மாவட்ட எல்லைகள் சோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை அசோக்நகரை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருப்பதால் கடந்த ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து தமிழகம் வந்த 2,756 பயணிகள் பெயர் விலாசம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த 218 பேரும், இரண்டு வாரத்திற்கு முன்பு வந்த 1,791 பேரும், அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு வந்த 965 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

corona virus,severity,london,travelers,tracking ,கொரோனா வைரஸ்,தீவிரம்,லண்டன்,பயணிகள்,கண்காணிப்பு

இவர்கள் அனைவரும் ஏற்கனவே லண்டனில் இருந்து பயணம் செய்வதற்கு முன்பாக 96 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள். அவர்களை சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது எந்த அறிகுறியும் இல்லாததால் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்தவர்கள். 14 நாட்கள் தனிமை முடிந்தவர்கள் வெளியில் சென்று இருக்கக்கூடும் அதனால் அவர்களுக்கு தொடர்பில் உள்ளவர்கள் யார் யார்? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளின் மூலம் லண்டனில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து வந்த 218 பேருக்கு பரிசோதனை நடத்தப்படும். அதனை தொடர்ந்து படிப்படியாக அனைவருக்கும் சோதனை நடைபெறும். பாதுகாப்பு வளைய திட்டத்தால் கொரோனாவை தடுக்க ஏதுவாக இருக்கும். இது தவிர காய்ச்சல் கண்காணிப்பும் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுநாள் வரையில் கொரோனா தினசரி பாதிப்பு சராசரியாக ஆயிரமாக குறைந்து வருகிறது. தினமும் 70 ஆயிரம் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆனால் உலகளவில் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஐ.ஐ.டி. கல்லூரி சம்பவம் நம் அனைவருக்கும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கை கழுவ வேண்டும் போன்றவற்றை கடைப்பிடிக்க மீண்டும் உணர்த்துகிறது. இதில் சுணக்கம் காட்டுவது தவறு. பொதுமக்களுக்கு நோய் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் 104 எண்ணை தொடர்பு கொள்ளவும் என அவர் தெரிவித்தார்.

Tags :
|