Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 50வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது

50வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது

By: vaithegi Wed, 12 July 2023 2:43:18 PM

50வது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது


இந்தியா: பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக 2 அறிவிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ... டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் வெளியான அறிவிப்பின் படி புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டினுடக்சிமாப் மருந்து மற்றும் அரிதான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறப்பு மருத்துவ உணவுப் பொருள் (எஃப்எஸ்எம்பி) இறக்குமதிக்கு ஜிஎஸ்டியிலிருந்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

gst,notifications ,ஜிஎஸ்டி ,அறிவிப்புகள்

அதே போன்று ஆன்லைன் கேமிங்கில் திறமையான விளையாட்டுகள் + அதிர்ஷ்டமான விளையாட்டுகள் என்று வேறுபடுத்தும் கருத்தை ஜிஎஸ்டி கவுன்சில் பின்பற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த 3 ஆட்டங்களிலும் பந்தயம் கட்டும் மொத்த தொகைக்கு மட்டும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என மகாராஷ்டிராவின் வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். மேலும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது சினிமா துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
|