Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: நிலநடுக்கத்துறை பேராசிரியர்கள் எச்சரிக்கை

டில்லியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: நிலநடுக்கத்துறை பேராசிரியர்கள் எச்சரிக்கை

By: Nagaraj Sat, 06 June 2020 7:28:39 PM

டில்லியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: நிலநடுக்கத்துறை பேராசிரியர்கள் எச்சரிக்கை

கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு... இனி வரும் நாட்களில், டில்லி மற்றும் என்சிஆர் (தேசிய தலைநகர் பிராந்தியம்) பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் உள்ள ஐஐடியின் புவியியல் மற்றும் நிலநடுக்கத்துறை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய அந்த துறை பேராசிரியர் பி கே கான் கூறியதாவது:

தற்போது, அந்த பகுதிகளில் சிறிய அளவில் ஏற்படும் நில அதிர்வுகள், பெரிய அளவில் பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.

warning,large scale,earthquake,precautions,urbanization ,எச்சரிக்கை, பெரிய அளவு, பூகம்பம், முன்னெச்சரிக்கை, நகரமயமாதல்

பூகம்பம் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் டில்லி அரசு எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ரிக்டரில் 4.0 மற்றும் 4.9 என்ற அளவில் 64 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. 5.0 என்ற ரிக்டர் அளவில் 8 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இது, டில்லி மற்றும் கங்காரா பகுதிகளில், நில அதிர்வுகளின் ஆற்றல் அதிகரித்து வருவதை காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களில், அந்த பகுதிகளில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

warning,large scale,earthquake,precautions,urbanization ,எச்சரிக்கை, பெரிய அளவு, பூகம்பம், முன்னெச்சரிக்கை, நகரமயமாதல்

கடைசியாக நொய்டாவில் கடந்த 3ம் தேதி நில அதிர்வு உண்டானது. என்சிஆர் பகுதி, கங்ராவில் இருந்து 370 கி.மீ., தொலைவிலும், உத்தர்காசியில் இருந்து 260 கி.மீ., தூரத்திலும் உள்ளது. இந்த பகுதிகள் கடுமையான பூகம்பத்தை சந்தித்த பகுதிகள். இந்த பகுதியில் ஏற்படும் கடுமையான பூகம்பம் என்சிஆர் பகுதியையும் பாதிக்கும்.

கங்ரா அருகில் உள்ள சம்பா மற்றும் தர்மசாலாவில் முறையே, 1945 ல் 6.3 மற்றும் 1905 ல் 7.8 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. உத்தர்காசியில் 1803 ல் ரிக்டரில் 7.7 என்ற அளவிலும், 1991 ல் 6.8 என்ற அளவிலும் பூகம்பம் ஏற்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் நகரமயமாதல் மற்றும் கட்டுமான பணிகளின் போது பூகம்பம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டால், அது என்சிஆர் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags :