Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த 8 மாநிலங்களுக்கு, கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

இந்த 8 மாநிலங்களுக்கு, கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

By: vaithegi Wed, 19 Apr 2023 11:30:44 AM

இந்த 8 மாநிலங்களுக்கு, கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

இந்தியா: மேற்கு வங்காளம், பீகார், சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற 8 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பச் சலனம் உயர்ந்து வருவதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து, அதன்பிறகு குறையும் என ஐஎம்டி எச்சரித்துள்ளது. கிழக்கிந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பம் தொடரும் என்றும், அதன்பிறகு குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

heat wave,heat wave ,வெப்ப அலை,வெப்பச் சலனம்

மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40-44 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. மேலும் வடமேற்கு இந்தியாவில், அடுத்த 3 நாட்களில் மேற்கு இமாலயப் பகுதியில் இடியுடன் கூடிய மழை அல்லது மிதமான பரவலான மழை பெய்யக்கூடும்.

இதையடுத்து பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை (அ) மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ராஜஸ்தானில் ஏப்ரல் 21 வரை மழை பெய்யக்கூடும் என்றும் ஐஎம்டி அறிவித்துள்ளது.

Tags :