Advertisement

தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயல்

By: Nagaraj Sat, 11 Mar 2023 11:47:44 PM

தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயல்

கலிபோர்னியா: கடுமையான குளிர்கால் புயல்... அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெற்கு கலிபோர்னியாவில், கடுமையான குளிர்கால புயலுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 26ஆம் முதல் மார்ச் 8ஆம் திகதி வரை குளிர்கால புயலுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் அளவுக்கு ஆழமான பனி மலைப் பகுதிகளையும், வீதிகளையும் சூழ்ந்துள்ளதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

usa,california,governor gavin,newsom,winter storm,southern california ,அமெரிக்கா, கலிபோர்னியா, ஆளுநர் கவின், நியூசோம், குளிர்கால புயல், தெற்கு கலிபோர்னியா

மக்களுக்கு நாளுக்கு நாள் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்து வருகின்றது. மின்சாரம் இல்லாமலும் தவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மார்ச் 1ஆம் திகதி முதல் அப்பகுதியில் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடக் குளிர்கால புயலுக்குப் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|