Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலியல் தொழில் குற்றமில்லை... தென் ஆப்பிரிக்கா எடுத்த முடிவு

பாலியல் தொழில் குற்றமில்லை... தென் ஆப்பிரிக்கா எடுத்த முடிவு

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:55:01 AM

பாலியல் தொழில் குற்றமில்லை... தென் ஆப்பிரிக்கா எடுத்த முடிவு

தென் ஆப்பிரிக்கா: பாலியல் தொழில் குற்றம் இல்லை என்று தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக நிலுவையில் உள்ளது.

ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது:

பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றுவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.

notice,south africa,sex work,decision,not guilty ,அறிவிப்பு, தென்னாப்ரிக்கா, பாலியல் தொழில், முடிவு, குற்றமில்லை

மேலும் பாலியல் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை மற்றும் சுகாதார நிலைமைகளை இது உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 1000 பெண்கள் தென்னாபிரிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் கற்பழிப்பும் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின் படி தென்னாபிரிக்காவில் 150,000-கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

மேலும் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி பாதிப்புகள் இருக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|