Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் இன்று சக்தி திட்டம் அமல்... கோயில்களில் குவிந்த பெண்கள்

கர்நாடகாவில் இன்று சக்தி திட்டம் அமல்... கோயில்களில் குவிந்த பெண்கள்

By: Nagaraj Sun, 18 June 2023 9:08:06 PM

கர்நாடகாவில் இன்று சக்தி திட்டம் அமல்... கோயில்களில் குவிந்த பெண்கள்

பெங்களூரு: இன்று சக்தி திட்டம் அமலுக்கு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு பெண்கள் படையெடுத்தனர். இதற்காக பெங்களூருவில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் நேற்று கூட்டம் அலைமோதியது.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. முதல் வாக்குறுதியாக, பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தவிர அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். BMDC, KSRTC ஆகிய 4 போக்குவரத்து மண்டல பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள்.

echo,free travel,girls,temples,tourist places, ,இலவச பயணம், எதிரொலி, கோவில்கள், சுற்றுலா தலங்கள், பெண்கள்

இந்நிலையில் இன்று சக்தி திட்டம் அமலுக்கு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு படையெடுக்க பெண்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக பெங்களூருவில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து மைசூரு, தர்மஸ்தலா, மலை மாதேஸ்வரா போன்ற இடங்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தனர்.அதே நேரத்தில் பல கே.எஸ்.ஆர்.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு காரணமாக இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

பயணிகள் வருகை அதிகரிப்பால் பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூர் மற்றும் மலை மாதேஸ்வரா கோயிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சாம்ராநகர் மாவட்டம் கொள்ளேக்காலில் இருந்து மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை பெண்கள் கூட்டம் அடித்து நொறுக்கியது. இதனால் பஸ்சின் பின்பக்க கதவு உடைந்தது.

Tags :
|
|