Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் சதவீதம் உயர்ந்தது

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் சதவீதம் உயர்ந்தது

By: Nagaraj Thu, 20 July 2023 08:51:56 AM

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் சதவீதம் உயர்ந்தது

மும்பை: பங்குகள் உயர்வு... பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஜூன் காலாண்டில் நிகர லாபம் 95 சதவீதம் உயர்ந்ததை அடுத்து அதன் பங்குகள் சுமார் 6 சதவீதம் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை 5.65 சதவீதம் உயர்ந்து 33.28 ரூபாயாக நிலைபெற்றது. மேலும் இது 6.34 சதவீதம் உயர்ந்து ரூ.33.50 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 5.39 சதவீதம் உயர்ந்து ரூ.33.20 நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில் 142.08 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 16.47 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.

வாராக் கடன்கள் சரிவு மற்றும் வட்டி வருவாயில் முன்னேற்றம் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 95 சதவீதம் அதிகரித்து ரூ.882 கோடியாக உயர்ந்துள்ளது.

புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.452 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.3,774 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.5,417 கோடியானது என்று பேங்க் ஆப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது.

maharashtra,gross revenue,net profit,headquarter ,மகாராஷ்டிரா, மொத்த வருவாய், நிகர லாபம், தலைமையிடம்

Tags :