Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முஷாரப்புக்கு புகழாரம் சூட்டிய சசிதரூர்... கடும் கண்டனம் தெரிவித்த பாஜக

முஷாரப்புக்கு புகழாரம் சூட்டிய சசிதரூர்... கடும் கண்டனம் தெரிவித்த பாஜக

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:12:58 AM

முஷாரப்புக்கு புகழாரம் சூட்டிய சசிதரூர்... கடும் கண்டனம் தெரிவித்த பாஜக

புது டெல்லி: பாஜக கடும் கண்டனம்... மறைந்த முஷரப்புக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் புகழாரம் சூட்டியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சசிதரூர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: முஷாரப் மறைந்து விட்டார். ஒரு காலத்தில் இந்தியாவின் அசைக்க முடியாத எதிரியாக இருந்த அவர், 2002 மற்றும் 2007 க்கு இடையில் அமைதிக்கான உண்மையான சக்தியாக மாறினார். நான் ஐ.நா.வில் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்தேன்.

bjp,congress,m.p. sasidharoor,musharraf, ,எம்.பி. சசிதரூர், காங்கிரஸ், பாஜக, முஷரப்

அவர் தனது மூலோபாய சிந்தனையில் கூர்மையாகவும் தெளிவாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து இருந்தார். இதனிடையே சசிதரூரின் பாராட்டுப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: கார்கில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் முஷாரப். சர்வாதிகாரி. மரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் தலிபான்களையும், பின்லேடனையும் சகோதரர்கள் மற்றும் ஹீரோக்கள் என்று போற்றினார். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களை வாங்க மறுத்துவிட்டார். அவரை காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது. மீண்டும் பாகிஸ்தானை வழிபடுவதில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் முஷாரப், ராகுல் காந்தியை ‘ஜென்டில்மேன்’ என்று புகழ்ந்தார். மன்மோகன் சிங் தனது மனைவி, மகன் மற்றும் சகோதரரை விருந்துக்கு அழைத்ததாகவும் அவர் கூறினார். இது முஷாரப்புடன் காங்கிரஸ் நெருங்குவதற்கு காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது. எனக் கூறினார்.

Tags :
|