Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழனியில் மொட்டை அடிக்கும் நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

பழனியில் மொட்டை அடிக்கும் நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

By: Nagaraj Mon, 02 Jan 2023 5:49:47 PM

பழனியில் மொட்டை அடிக்கும் நிலைய தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

திண்டுக்கல்: பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில் பணிபுரியும் 308க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்‌‌. இவ்வாறு வரும் பக்தர்கள் முருகனுக்கு முடிக்காணிக்கை செய்வது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக பழனி அடிவாரம், சரவணப்பொய்கை, சண்முகநதி, தேவர் சிலை உள்பட 8இடங்களில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மண்டபங்கள் செயல்படுகிறது.

இங்கு 300க்கும் மேற்பட்ட மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக ஒரு மொட்டைக்கு 30 ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 13ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இது திருவிழா காலங்களில் இன்னும் கூடுதலாக ஊதியம் கிடைக்கும் என்று கோவில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

staff,attendance,instruction,record,signature ,ஊழியர்கள், வருகை, அறிவுறுத்தல், பதிவேடு, கையெழுத்து

இந்நிலையில் பழனியில் உள்ள மொட்டை அடிக்கும் நிலையங்களில் பணிபுரியும் 308க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:- முடி எடுக்கும் தொழிலாளர்களை பழனி கோவில் நிர்வாகம் வழங்கும் ஊதியம் போதவில்லை, சிறுசிறு தவறு நடந்தால் கூட பணியிடை நீக்கம் செய்வதால் தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், கண்காணிப்பாளர் வருகையின்போது பணியில் இல்லாத ஊழியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் வரவில்லை என எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.


இன்று முடிக்கொட்டைகை கண்காணிப்பாளர் அர்ஜுனன் வருகை பதிவேட்டை பார்த்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டு பணிக்கு வராத ஊழியர்களின் வருகையை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
|
|