Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமென்றாலும் அயோத்தி செல்வார் - சஞ்சய் ராவத்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமென்றாலும் அயோத்தி செல்வார் - சஞ்சய் ராவத்

By: Karunakaran Tue, 21 July 2020 11:46:56 AM

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமென்றாலும் அயோத்தி செல்வார் - சஞ்சய் ராவத்

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தேதி இந்த விழா நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விழாவிற்கு யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. தற்போது, மோடி கலந்து கொள்ள இருக்கும் அயோத்தி விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வாரா? என சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்திடம் கேட்கப்பட்டது.

sanjay rawat,uddhav thackeray,shiv sena leader,ayodhya ,சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே, சிவசேனா தலைவர், அயோத்தி

இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், உத்தவ் தாக்கரே எப்போது வேண்டுமென்றாலும் அயோத்தி செல்வார். அவர் முதல் மந்திரியாக இல்லாத நேரத்தில் அயோத்தி சென்றுள்ளார். முதலமைச்சர் ஆன பிறகும் சென்றார். அயோத்திக்கும் சிவ சேனாவுக்கும் இடையிலான உறவு அப்படியே உள்ளது. அது ஒரு அரசியல் உறவு அல்ல என்று கூறினார்.

மேலும் அவர், அரசியலுக்காக நாங்கள் அயோத்தி செல்லமாட்டோம். கடந்த காலத்திலும் அதற்காக செல்லவில்லை. மாறாக, சிவ சேனா ராம் கோவிலுக்கான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கு முக்கிய தடையாக இருந்ததை அகற்றியுள்ளது. சிவசேனா சேனைகள் இந்துத்வாவிற்காகவும், நம்பிக்கைக்காகவும் தியாகம் செய்தவர்கள். எங்களுடைய உறவு அப்படியே உள்ளது என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Tags :