Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில்

By: Karunakaran Mon, 28 Sept 2020 4:21:01 PM

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதில்

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாரதிய ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால் பின்னர் கட்சியுடன் உடன்பாடு ஏற்படாமல், சிவசேனா கூட்டணியை முறித்து கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கைகோர்த்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்தது. தற்போது அங்கு சிவசேனா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார். சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அரசை அமைக்க காரணமாக இருந்தவர் சஞ்சய் ராவத்.

shiv sena mp,devendra patnaik,sanjay rawat,meeting ,சிவசேனா எம்.பி., தேவேந்திர பட்நாயக், சஞ்சய் ராவத், சந்திப்பு

இந்நிலையில் சஞ்சய் ராவத், தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், நானும், தேவேந்திர பட்னாவிசும் எதிரிகள் அல்ல. இது எங்களது கட்சி பத்திரிகைக்காக பேட்டி எடுப்பது தொடர்பாக பேச முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதை எங்களது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிந்து இருக்கிறார் என்று கூறினார்.

இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பேட்டி அளித்தபோது, சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசின் செயல்பாட்டில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த அரசு தானாக கவிழத்தான் போகிறது. அதை நாம் பார்க்கத்தான் போகிறோம். புதிய அரசை அமைப்பதற்காக சிவசேனாவுடன் கைகோர்க்கும் திட்டம் பா.ஜ.க.வுக்கு இல்லை. சஞ்சய் ராவத் என்னை சந்தித்துப் பேசியதில் அரசியல் எதுவும் இல்லை. சாம்னா பேட்டிக்காக என்னை அணுகினார். நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளேன். எனது பேட்டியை அப்படியே பிரசுரிக்க வேண்டும் என்று கூறினேன் என்று கூறினார்.

Tags :