Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி: 32 லட்சம் பில் கொடுத்தது உபர் கால் டாக்ஸி

வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி: 32 லட்சம் பில் கொடுத்தது உபர் கால் டாக்ஸி

By: Nagaraj Tue, 11 Oct 2022 11:27:32 PM

வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி: 32 லட்சம் பில் கொடுத்தது உபர் கால் டாக்ஸி

இங்கிலாந்து: இங்கிலாந்தில் ஒரு நபர் உபர் கால் டாக்ஸியில் பயணம் செய்த பின் அவருக்கு 32 லட்சம் பில் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இங்கிலாந்து மான்செஸ்டரில் உள்ள பக்ஸ்டன் விடுதியில் இருந்து பணியை முடித்துவிட்டு ஆலிவர் கப்லான் என்ற நபர் தனது வீட்டிற்கு செல்ல உபர் டாக்ஸியை புக் செய்துள்ளார். மான்செஸ்டரில் இருந்து 15 நிமிட பயண தூரத்திலேயே ஆலிவர் செல்லும் இடமான சவுத் வெஸ்ட் நியூஸ் சர்வீஸ் இருந்துள்ளது. கிட்டதட்ட இது சுமார் 6 கிமீ தூர அளவே இருக்கும். பயணம் முடிந்த பிறகு ஆலிவருக்கு பயணத்திற்காக £10 மற்றும் £11 ($11.05 மற்றும் $12.16) வரை காட்டியுள்ளது. இது சாதாரண பயணம் கட்டணம் சென்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து, பயணம் முடிந்து தனது வீட்டிற்கு சென்ற ஆலிவர் இருந்த சோர்வில் உடனடியாக படுத்து உறங்கியுள்ளார். அடுத்த நாள் காலை அவர் முழித்து பார்த்தபோது உபர் பயணத்திற்காக அவருக்கு கிட்டதட்ட 39000 டாலராக (இந்திய மதிப்பின்படி 32 லட்சம்) காண்பித்துள்ளது. ஆனால் அவரது வங்கி கணக்கில் அவ்வளவு இல்லாததால் உபர் நிறுவனத்தால் அந்த பெரிய தொகையை எடுக்க முடியவில்லை.

uber,15 minutes ride,shock,lakhs,fare ,
உபர், 15 நிமிட பயணம், அதிர்ச்சி, லட்சம், கட்டணம்

இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஆலிவர் உடனடியாக உபர் நிறுவனத்தை தொடர்புகொண்டு, 15 நிமிட பயணத்திற்கு தன்னிடன் ஏன் அதிக தொகையை வசூலித்துள்ளீர்கள். நல்ல வேளையாக தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் உங்களால் அதை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நிறுவனத்தின் ஊழியர்கள் சோதனை செய்து பார்த்தபோது, டிராப் அப் பாயிண்ட் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டதை கண்டறிந்துள்ளனர். மேலும் லொகேஷன் தானாக க மான்செஸ்டரில் உள்ள விட்ச்வுட் என்ற மதுக்கடையில் இருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள விட்ச்வுட் என்ற பூங்காவிற்கு இருப்பிடத்தை மாற்றியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து தான் இறங்கிய இடம் குறித்து தெளிவாக பேசி ஆலிவர் பிரச்சனையை தீர்த்தார்.

Tags :
|
|
|