Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலையானதால் அதிர்ச்சி

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலையானதால் அதிர்ச்சி

By: Nagaraj Mon, 06 Mar 2023 10:27:10 PM

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலையானதால் அதிர்ச்சி

ரஷ்யா: கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை... ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஆண்ட்ரு பொட்டிக்வ் கொல்லப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் சுமார் 70 லட்சம் உயிர்களைக் கொன்றது. விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால், கொரோனா தொற்றுக்கு பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில், ரஷ்ய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வி. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பலனைத் தந்துள்ளது. 18 விஞ்ஞானிகள் குழு இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தது. இது 2020 இல் பயன்பாட்டுக்கு வந்தது.

corona,corona vaccine,murdered,sputnik, ,அதிர்ச்சி தகவல், கொரோனா, தடுப்பூசி, ரஷ்யா

இந்த குழுவில் ஆண்ட்ரு போடிக்வே முதன்மை விஞ்ஞானி ஆவார். 47 வயதுடைய நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என அந்நாட்டு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணையில், ஆண்ட்ரூவை 29 வயது இளைஞர் கொன்றிருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ரஷ்ய போலீசார் தெரிவித்தனர். அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|