Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் குறித்து வெளியான ஆய்வு தகவலால் அதிர்ச்சி

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் குறித்து வெளியான ஆய்வு தகவலால் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 07 Aug 2020 11:14:06 AM

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் குறித்து வெளியான ஆய்வு தகவலால் அதிர்ச்சி

ஆய்வில் வெளியான அதிர்ச்சி... கொரோனா தொற்று வெடித்த வுகான் நகரில், அதில் இருந்து குணமடைந்தவர்களில் 90 சதவிகிதம் பேரின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

பாதிப்பு ஏற்பட்டு குணமானவர்களில் 5 சதவிகிதம் பேருக்கு மீண்டும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் குவாரன்டைனில் வைக்கப்பட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வுகானில் உள்ள ஸோங்கான் (Zhongnan) மருத்துவமனை குழுவினர், தொற்றில் இருந்து குணமடைந்த 100 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.

discharge,crew,lungs,respiration,not improved ,டிஸ்சார்ஜ், ஆய்வுக்குழுவினர், நுரையீரல், சுவாசத்திறன், மேம்படவில்லை

தொற்றில் இருந்து குணமடைந்தாலும், நுரையீரலில் காற்று செல்லும் திறன், சுவாச திறன் ஆகியன நலமாக இருப்பவர்களின் அளவிற்கு மேம்படவில்லை என ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

டிஸ்சார்ஜ் ஆகி 3 மாதங்கள் ஆன பிறகும் சிலர் ஆக்சிஜன் கருவிகளின் துணையை நம்பியே இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதே போன்று 10 சதவிகிதம் பேருக்கு உடலில் உருவான கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மறைந்துவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|