Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் விஞ்ஞானிகள் அளித்த அதிர்ச்சி தகவல்.. புதிய வகை கொரோனா..

இஸ்ரேல் விஞ்ஞானிகள் அளித்த அதிர்ச்சி தகவல்.. புதிய வகை கொரோனா..

By: Monisha Thu, 07 July 2022 8:15:47 PM

இஸ்ரேல் விஞ்ஞானிகள் அளித்த  அதிர்ச்சி தகவல்.. புதிய வகை  கொரோனா..

இந்தியா: ஒமைக்ரான் பிஏ வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலேயே தோன்றி உள்ளதாகவும், 10 மாநிலங்களில் அது பரவி உள்ளதாகவும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.


தடுப்பூசி செலுத்திய பிறகும், இந்தியாவில் கொரோனா எப்படி மீண்டும் பரவ தொடங்கியுள்ளது என்பது குறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், கொரோனா வைரசின் புதிய வடிவமான பிஏ 2.75 இந்தியாவில் பரவி இருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரவில்லை என்றும், இந்தியாவில் தான் இது உருவாகி இருப்பதாகவும் அந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

corona,israel,omicron,new shape ,ஒமைக்ரான்,கொரோனா ,வைரஸ்,வடிவம்,

'கொரோனா வைரஸ் உருமாற்றம் என்பது தற்போது சாதாரணமாகிவிட்டது, தொடர்ந்து இந்த இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அதற்காக இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என கூறப்படுவதை ஏற்று கொள்ள இயலாது' என்று ஐசிஎம்ஆர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|