இந்திய பெருங்கடல் மீது சீனா குறி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்
By: Nagaraj Tue, 16 May 2023 10:34:56 PM
புதுடில்லி: சீனாவின் திட்டம்... தென் சீனக்கடல் பகுதியைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவின் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் இந்தியப் பெருங்கடல் மீது சீனா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அரபிக் கடல் பகுதியில் ஓமன் அருகே யுவான் வாங் 7 என்ற ஏவுகணை ஆய்வு சாதனைகளை நிறுவியுள்ள சீனா, மற்றொரு யுவான்வாங் 5 சாதனத்தை தென் அட்லாண்டிக் கடல் பகுதியில் நிறுத்தியுள்ளது.
கடலில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்த இப்போது சீனா ஆப்பிரிக்கா கடல் பகுதிக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் சீனாவின் கண்காணிப்புகள் ஆராய்ச்சி என்ற பெயரில் அதிகரித்து வந்துள்ளன.
Tags :
research |