Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும் என அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும் என அதிர்ச்சி தகவல்

By: Karunakaran Wed, 16 Sept 2020 09:39:48 AM

கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும் என அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரசின் தன்மையை பற்றி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தது குறித்து ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உலகத்தில் தங்கி இருக்கும். இது மந்தை எதிர்ப்புச்சக்தியை மனிதர்கள் அடைகிற வரையில் ஆண்டு முழுவதும் பருவ கால நோய்போல வலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் முக கவசங்களை அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கை சுத்தம் பின்பற்றுவது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர வேண்டும். மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிற வரையில், கொரோனாவின் பல அலைகள் பொதுமக்களை வந்து தாக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

corona virus,seasonal virus,lebanon,america ,கொரோனா வைரஸ், பருவகால வைரஸ், லெபனான், அமெரிக்கா

மேலும் இந்த ஆய்வில், இன்புளூவன்சா மற்றும் பொதுவான கொரோனா வைரஸ்கள் மிதமான வெப்ப பகுதிகளில் குளிர்காலத்தில் உச்சம் பெறுகின்றன. ஆனால் வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவுகின்றன. காய்ச்சல் போன்ற பிற சுவாச நோய்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பருவ கால நோயாக ஆண்டு முழுவதும் வலம் வரும் என்கிற நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுகிற வரையில், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுவதுதான், வைரஸ் தாக்குவதில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :