Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைன் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியதாக அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியதாக அதிர்ச்சி தகவல்

By: Nagaraj Mon, 13 Mar 2023 10:51:14 PM

உக்ரைன் மீது தெர்மைட் குண்டுகளை ரஷ்யா வீசியதாக அதிர்ச்சி தகவல்

உக்ரைன்: தெர்மைட் குண்டுகள் வீசியதாக தகவல்... கடந்த ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெர்மைட் குண்டுகளை வீசிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் உள்ள வுஹ்லேடார் நகரின் மீது ரஷ்யா தெர்மைட் குண்டுகளை வீசி அந்த நகரத்தை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

bomb,ukraine-russia,war, ,உக்ரைன், தெர்மைட் குண்டு, ரஷ்யா

இரு தரப்பிலும் இதுவரை நடந்த போரில் சுமார் 1,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ரஷ்யா வுஹ்லேதார் மீது தெர்மைட் குண்டுகளை வீசியதால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலுமினியம் மற்றும் இரும்பு ஆக்சைடு ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த குண்டுகள் மனித உடலில் பட்டால் சதையை எரிக்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.

Tags :
|
|