Advertisement

கடை அடைப்பு போராட்டம்..வணிகர் சங்கம் அறிவிப்பு..

By: Monisha Sun, 10 July 2022 9:20:37 PM

கடை அடைப்பு போராட்டம்..வணிகர் சங்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு: வணிகர் சந்தித்து வரும் ஜிஎஸ்டி பிரச்னைக்கு மத்திய அரசு உரிய தீர்வை காணாவிட்டால் நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக,செஸ் வரி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தீர்வுகாண வலியுறுத்தப்படும்.ஜிஎஸ்டி சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

tax,shop,closed,reduce ,வணிகர், ஜிஎஸ்டி,வரி,அமைச்சர் ,

வரிகள் தொடர்பான விஷயங்களில் உரிய தீர்வு காணவிட்டால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்படும்.

அத்துடன் ஜிஎஸ்டி பிரச்னைக்கு தீர்வுகள் காணவிட்டால் ,நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags :
|
|
|