Advertisement

கோவில்பட்டியில் வரும் 15ம் தேதி வரை கடைகள் அடைப்பு

By: Nagaraj Sat, 11 July 2020 3:29:31 PM

கோவில்பட்டியில் வரும் 15ம் தேதி வரை கடைகள் அடைப்பு

வரும் 15ம் தேதி கடைகள் அடைப்பு... கோவில்பட்டி நகரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரிவு சார்பில் இன்று முதல் வரும் 15ந் தேதி வரை கடைகள் அடைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரிவு சார்பில் இன்று முதல் வரும் 15ந் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

shops closed,corona,preventive action,kovilpatti ,கடைகள் அடைப்பு, கொரோனா, தடுப்பு நடவடிக்கை, கோவில்பட்டி

அதன்படி கோவில்பட்டி நகரில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், பலசரக்கு மற்றும் மொபைல் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. பேக்கரிகள், ஹோட்டல்கள், ஜவுளிகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

விளாத்திகுளத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருவாய்த்துறை உத்தரவு படி 5வது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி சார்பில் ஒரே ஒரு நடமாடும் காய்கறிக்கடை மட்டும் செயல்பட்டு வருகிறது. காய்கறி, பலசரக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கமால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
|