Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைத்தியசாலை இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு

வைத்தியசாலை இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு

By: Nagaraj Tue, 13 Oct 2020 09:41:10 AM

வைத்தியசாலை இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு

இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு... தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ். குடாநாட்டு வைத்திய சாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் தெரிவித்தார்.

சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் இரத்ததான முகாம்கள் பிற்போடப்பட்டமையே இரத்த தட்டுப்பாட்டிற்கான காரணமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

blood type,scarcity,telephone,blood donors ,
இரத்தவகை, தட்டுப்பாடு, தொலைபேசி, குருதிக் கொடையாளர்கள்

இதனைக் கருத்திற் கொண்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்திய சாலைகளின் இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும்.

அந்தவகையில் தினமும் காலை-08 மணி முதல் மாலை- 04 மணி வரை தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா கால சுகாதார நடைமுறைகல்ளுக்கமைய குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் வழங்க முடியும்.

தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இரத்ததான முகாம்களின் ஒழுங்கமைப்பாளர்கள் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் மேலதிக விபரங்களிற்கு 0772988917 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :