Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்புத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டீசலுக்கு தட்டுப்பாடு

கோயம்புத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டீசலுக்கு தட்டுப்பாடு

By: vaithegi Tue, 21 June 2022 6:05:47 PM

கோயம்புத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் டீசலுக்கு தட்டுப்பாடு

கோயம்புத்தூர் : கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை மிக பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை அங்கு நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்திலும் ஓரிரு மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமாக, 130 பங்க்குகள், பாரத் பெட்ரோலியத்துக்கு சொந்தமாக, 80, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு சொந்தமாக, 49 பெட்ரோல் பங்குகள் உள்ளன.

shortage,petrol,diesel ,தட்டுப்பாடு,பெட்ரோல் ,டீசல்

டீசல் தட்டுப்பாடு குறித்து கோயம்புத்தூர் மாவட்ட பெட்ரோல் பங்க் டீலர்ஸ் அசோசியேஷன் பொருளாளர் மோகன்ராஜ் கூறியது , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தவிர, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு டீசலை மட்டும் ரேஷன் முறையில் வழங்கி வருகிறது. நாங்கள் கேட்கும் அளவுக்கு டீசல் வழங்குவதில்லை. வழக்கமாக வழங்கப்படும் கோட்டாவில் ஒரு பகுதியை குறைத்து தான் வழங்குகின்றனர் என்று மோகன்ராஜ் கூறினார்.

இது குறித்து, பாரத் பெட்ரோலியம் கோவை டெரிட்டரி மேலாளர் சந்திரசேகர் கூறியது, கோவையை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. சில டீலர்கள் முன்னதாக செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்ததால், விநியோகத்தை நிறுத்தி வைத்திருப்போம்.

தொகையை சரியாக செலுத்துபவர்களுக்கு முறையாக பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. சில பங்க்குகளுக்கு டீசல், ரேஷன் முறையில் வழங்கப்படுவது எங்களது துறையின் கொள்கை முடிவுகளுள் ஒன்று. அது குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது என சந்திரசேகர் அவர்கள் கூறினார்.

Tags :
|