Advertisement

பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு

By: Nagaraj Mon, 24 Aug 2020 7:37:14 PM

பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு

மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு... அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் இயங்காத நிலையில், மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

எனினும், அந்த வகுப்புகளில் அவர்கள் பங்கேற்பதற்குத் தேவையான மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்களுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

shortage,chinese goods,laptops,school administration ,பற்றாக்குறை, சீனப்பொருட்கள், மடிக்கணினிகள், பள்ளி நிர்வாகம்

உலகின் மிகப் பெரிய 3 கணினி தயாரிப்பாளர்களான லெனோவா, ஹெச்.பி., டெல் ஆகியவை தேவையை விட 50 லட்சம் கணினிகளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பள்ளி நிர்வாகங்களிடம் தெரிவித்துள்ளன.

மேலும் டிரம்ப் தலைமையிலான அரசு சீனப் பொருள்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்ததும் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :